முகப்புகோலிவுட்

“வாழ்க மகனே!” ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு ஆடிய அஸ்வினுக்கு கமல் பாராட்டு.!

  | June 19, 2020 20:59 IST
Kamal Haasan

இவர் தமிழில் ‘ரணம்’ மற்றும் தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இளம் இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தனது நடன நகர்வுகளால் சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தின் ‘அணாத்த ஆடுறார்' என்ற பாடலுக்கு ‘உலக நாயகன்' கமல் ஹாசனைப் போலவே ஒரு டிரெட்மில்லில் நடனமாடும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார். ஆடை, சிகை அலங்காரம் மற்றும் நடனமாடும் ஸ்டைல் அனைத்தும் கமல் ஹாசனின் தோற்றத்தைப் போல அச்சு அசலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களிடமிருந்து அற்புதமான கமண்டுகளையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. மேலும் அனைவரும் அந்த வீடியோவை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துகொண்டிருந்தனர். பல பிரபலங்களும் ஈர்க்கப்பட்டாலும், உலகநாயகனே அந்த வீடியோவைப் பார்த்து, அஸ்வினின் வீடியோவைக் கண்டு பெருமை அடைவதாக அவர், தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது சமூக வலைப்பின்னல் “நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!” எனக் கூறியுள்ளார். அதனைக் கண்டு மகிழ்ந்த அஸ்வின், கமலின் பதிவை தனது வீட்டில் ஃப்ரேம் போட்டு வைத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

‘ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜியம்' என்ற படத்தின் மூலம் மலையாள ரசிகர்களைடையே பிரபலமாக உள்ள அஸ்வின், நடிகர் இந்திரஜித்தின் வரவிருக்கும் ‘அஹா' படத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். இவர் தமிழில் ‘ரணம்' மற்றும் தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com