முகப்புகோலிவுட்

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பழம்பெரும் நடிகர்..!

  | December 10, 2019 12:28 IST
Actor Charuhasan

துனுக்குகள்

 • சாருஹாசன் ‘உதிரிப் பூக்கள்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.
 • சமீபத்தின் ‘தா தா 87’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 • வரும் 2020 ஜனவரி 5-ஆம் தேதியன்று இவருக்கு 90 வயதாகிறது.
கமல்ஹாசனின் மூத்த அண்ணனான சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

நடிகர் சாருஹாசனுக்கு தற்போது 89 வயதாகிறது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது வழக்கறிஞரும் ஆவார். இவர் IPC 215, புதிய சங்கமம், தபாராணா காதே, துர்கா சக்தி, நீலாம்பரி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளர்.

ஜே. மகேந்திரன் இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளியான ‘உதிரிபூக்கள்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், சமீபத்தில் ‘தா தா 87' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 90 வயதாகவுள்ள நிலையில், இன்று வரை வில்லன், கதாநாயகன், குனச்சித்திர நடிகர் எனத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் இந்த மூத்த நடிகரின் சினிமா பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இவருக்கு தற்போது வாழ்நாள் சாதையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
இம்மாதம் 12-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் சாருஹாசனுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com