முகப்புகோலிவுட்

கமல் எனக்கு “கலையுலக அண்ணா” -  ரஜினிகாந்த் புகழாரம்!

  | November 08, 2019 12:20 IST
Kamal

துனுக்குகள்

  • ஹேராம் படத்தை 40 முறை பார்த்ததாக ரஜினி கூறினார்
  • கமல்ஹாசனின் ராஜ்கமல் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
  • இதில் மனிரத்னம், வைரமுத்து ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வைரமுத்து, ரஜினிகாந்த், இயக்குநர் மனிரத்னம், நாசர், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், கே.எஸ் ரவிகுமார். ஆகியோர் கலந்துக்கொண்டனர். கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து கே.பாலசந்தரின் சிலையை  திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த்,

“கலையுலக அண்ணா கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கலையுலக தகப்பனார் கே.பாலசந்தரின் சிலையை அவர் திறந்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கலையை உயிராக கொண்டிருப்பவர் நண்பர் கமல்ஹாசன். அவரின்  ராஜ் கமல் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் “ராஜ பார்வை” “இந்த படத்தில் கதாநாயகனுக்கு கண் தெரியாதமே இது சரிபட்டு வராது என்று உன் நண்பணிடம் சொல்ல மாட்டியா” என்று சிவாஜி சார் என்னிடம் சொன்னார். நீங்களே அவரிடம் சொல்லுங்கள் என்றேன். ஆனால் கமல்ஹாசனின் கலைநுணுக்கம் அந்த படத்தை வெற்றியடைய செய்தது. இதனை அடுத்து விக்ரம், குருதிபுனல் இப்படி பல வெற்றிகளை ராஜ் கமல் நிறுவனம் கொடுத்திருக்கிறது.

கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்' படத்தை நான் இரவு 11 மணியளவில் பார்த்தேன். படம் பார்த்து இரவு 1 மணிக்கு நான் இப்போதே கமலை பார்க்க வேண்டும் என்றேன். இந்த நேரத்தில் அவர் தூக்கிக்கொண்டிருப்பார் என்றார்கள். நான் பரவாயில்லை அவரை பார்த்தாகவேண்டும் என்று அன்று இரவே அவர் வீட்டிற்கு சென்று தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி பாராட்டினேன்.

கமல் நடித்த தேவர்மகன் படம்  ஒரு காவியம், அரசியலுக்கு வந்தாலும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்க மாட்டார். நான் ஹேராம் படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருக்றேன்.  

கே.பி யோட பழகிய நாட்கள் இன்னும் அப்படியே கண் முன் நிற்கிறது. அவர் என்னிடம் சொன்னது. “நீ தமிழ் மட்டும் கத்துக்கோ, நான் உன்னை எங்கு கொண்டு போய் உக்கார வைக்கிறேன் பாரு” என்றார்.  அந்த மாதிரி ஒரு பெரிய மகான். அவருக்கு பிடித்த குழந்தை கமல். கே.பி. கமலைப்பார்த்து சிரிச்சிட்டே இருப்பாரு, கமல் பேசுவதை, சிரிப்பதை, தூங்குவதை ரசித்துக்கொண்டே இருப்பார். அனந்து சார், இன்னொரு பாலசந்தர். அவருடைய பிறந்த நாள் இன்று, இன்றைய தினத்தில் கே.பி-யின் சிலை திறப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்