முகப்புகோலிவுட்

இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி.!

  | August 06, 2020 21:05 IST
Kamal Haasan

இந்த சந்திப்பு சென்னை, வடபழனியில் இருக்கும் FEFSI அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நடிகர் சங்கத் தலைவர்-இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் உடனிருந்தார்.

துரதிர்ஷ்டவசமான கிரேன் விபத்தில் உயிர் இழந்த குழு உறுப்பினர்களின் குடும்பங்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.

கிரேன் விபத்தில் உயிர் இழந்த மூன்று பேர் உட்பட இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பலியான நான்கு குழு உறுப்பினர்களின் குடுப்பங்களையும் நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் சங்கர் மற்றும் படக்குழுவினர் இன்று சந்தித்துள்ளர். அறிக்கையின்படி, நான்கு குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. லைக்கா இந்தியன்-2 பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், கமல் ஹாசன் மற்றும் சங்கர் ஆகியோர் இணைந்து இந்த உதவியை வழங்கியுள்ளனர். இந்த சந்திப்பு சென்னை, வடபழனியில் இருக்கும் FEFSI அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நடிகர் சங்கத் தலைவர்-இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் உடனிருந்தார்.

gc046a4

பணி முன்னணியில், கமல்ஹாசன் வரவிருக்கும் ‘இந்தியன்-2'ல் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்திற்கு இயக்குநர் சங்கர் இயக்குகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்-2 படத்தில் ‘கோமாளி' பட நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். கமல்ஹாசனுடன் கதாநாயகியாக வரவிருக்கும் காஜலை தவிர்த்து, இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள்.

முன்னதாக கமல் ஹாசனின் பிறந்தநாளில், அவரது சேனாபதி கதாப்பாத்திர தோற்றத்தை இயக்குநர் சங்கர் பகிர்ந்திருந்தார். இப்போது,  பெரிய திரையில் படத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com