முகப்புகோலிவுட்

'இத்தகை வித்தகர் அடிக்கடி கிட்டார்' - கண்ணதாசனுக்கு கவிதையில் வாழ்த்து சொன்ன 'நம்மவர்'..!!

  | June 25, 2020 16:30 IST
Kannadasan

துனுக்குகள்

 • தமிழ் சினிமா என்ற வரலாற்றில் இந்த மாமேதையின் பெயர் இன்றி எழுதுவது என்பது
 • நேற்று அவருடைய பிறந்தநாளன்று உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின்
 • கடைமடை சேர்க்கும் இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்.?
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை", இது பெரும் கவி கண்ணதாசன் எழுதிய வரிகள். அந்த வரிகளுக்கு நிகராக வாழ்த்து காட்டிய மனிதரும் அவரே. காரைக்குடியில் பிறந்த இந்த கலைஞன் மறைந்தே 29 ஆண்டுகள் கடந்து விட்டது என்றபோது இவருடைய பாடல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம். 

தமிழ் சினிமா என்ற வரலாற்றில் இந்த மாமேதையின் பெயர் இன்றி எழுதுவது என்பது சற்றும் பொருத்தமில்லா ஒன்றி என்றால் அது மிகையல்ல. தயாரிப்பாளராக, கதாசிரியராக, பாடலாசிரியராக பல பரிமாணங்கள் கொண்டு விளங்கிய அற்புத கலைஞன். 5000-க்கும் ஆதிகமான திரைப்பாடல்கள், 6000-க்கும் அதிகமான கவிதை தொகுப்புகள், 232 புத்தக வெளியீடுகள் என்று தனி சாதனை படைத்துள்ளார் இந்த படைப்பாளி. 

நேற்று அவருடைய பிறந்தநாளன்று உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் சிறு கவிதை தொகுப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார். அந்த பதிவில் "அய்யன் கண்ணதாசருக்கு, என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி. இன்று உமக்குப் பிறந்த நாளாம். நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது. இத்தகை வித்தகர் அடிக்கடி கிட்டார். கிட்டா அடிகளை கடைமடை சேர்க்கும் இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்.? இன்றும், என்றும் ஓடும் நதி நீர். என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர்.!", என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com