முகப்புகோலிவுட்

2 பாகமாக வெளியாகவுள்ள இந்தியன்-2..? போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் இயக்குநர் சங்கர் அதிர்ச்சி..!

  | May 12, 2020 14:19 IST
Indian 2

அரசு அனுமதி அளைத்ததை அடுத்து நேற்று ‘இந்தியன் 2' படத்திற்கான ஓரளவு பிந்தைய தயாரிப்பு பணிகள் தொடங்கியது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படமான ‘இந்தியன் 2'. இந்த கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்' பிளாக்பஸ்டரின் தொடர்ச்சியாகும். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் படப்பிடிப்பின் ஆரம்பத்திலிருந்தே நிறைய சிக்கல்களைக் எதிர்கொண்டு வருகிறது.

இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, செட்டில்  விபத்து ஏற்பட்டு மூன்று பேர் கொடூரமாக உயிரிந்தனர். அதையடுத்து இப்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அரசு அனுமதி அளித்ததை அடுத்து நேற்று ‘இந்தியன் 2' படத்திற்கான ஓரளவு பிந்தைய தயாரிப்பு பணிகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஓடியதால் இயக்குநர் சங்கரும் அவரது குழுவும் சற்று அதிர்ச்சியில் அடைந்ததாக கூறப்படுகிறது. அதாவது, சுமார் நாற்பது சதவிகிதம் அதிகமாக உள்ளது.

அதனையடுத்து, சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட பரிசீலித்து வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. அப்படி முடிவெடுக்கப்பட்டால், அது நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகவே இருக்கும். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைக்கும் வரை காத்திருக்கலாம்.

இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார், சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com