முகப்புகோலிவுட்

காஞ்சனா 3 சிறப்புக்காட்சி ; பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திருநங்கைகள்

  | April 19, 2019 11:47 IST
Kanchana 3

துனுக்குகள்

  • இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கிறார்
  • இந்த படத்தில் ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
  • இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படம் இன்று வெளியானது. ஏற்கனவே வெளியா இந்த படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இதில் காஞ்சனா முதல் பாகத்தில் திருநங்கை ஒருவர் மற்றொரு திருநங்கையை மருத்துவராக்க பாடுபடும் கதாபாத்திரம் இடம் பெற்று பெறும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் சரத்குமார் திருநங்கை வேடமிட்டு நடித்திருந்தார்.
 
 திருநங்கைளை கேலிப்பொருளாக சித்தரித்து வந்த சினிமாக்களில் இப்படியான ஒரு படம் திருநங்கைகள் சமூகத்தில் ஒரு பெரும் அந்தஸ்த்தை கொடுத்தது.  திருநங்கைகள் பலரும் இந்த படத்தை பாராட்டியும் ஆதரவு கொடுத்தும் வந்தனர்.
 
அதன் அடிப்படையில் இன்றைய தினம் காஞ்சனா 3 படத்தின் முதல் காட்சியை திருநங்கைகள் பார்க்க வேண்டும் என்பதற்காக, சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் திரையரங்கில் காலை8 மணிக்கு முதல் காட்சி வெளியாகியது.
 
படத்தை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே திருநங்கைகள் திரையரங்கு வாசலில் பட்டாசு வெடித்தும், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை நடத்தியும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியோடும் இனிப்புகள் வழங்கியும், மேளத்தாளத்துடன் திருநங்கைகள் சாலையில் நடனம் ஆடி வரவேற்றனர்.
 
திரையரங்கின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மீது மலர்களை தூவியும் பால் அபிஷேகம் செய்தும் வரவேற்றனர்.
 
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநங்கை சிநேகிதியே அமைப்பின் தலைவி தனபாக்கியம் கூறுகையில், “இன்றைக்கு நாங்கள் சாலையில் சென்றால் சிலர் மதிப்போடு எங்களை பார்க்கிறார்கள் என்றால் அதற்கு நடிகர் ராகவா லரான்சும் ஒரு காரணம். அவர் காஞ்சனா முதல் படத்தில் எங்களை உயர்த்தி எங்களுக்கு என்று ஒரு தனி அத்யாயத்தை உருவாக்கி கொடுத்தார். இன்று பள்ளிகளிலும், கல்லுரிகள் என அனைத்து துறையிலும் முன்னுரிமை அளிக்கபட்டு வருகிறது.
 
எங்களுக்கு என்று நாங்கள் தங்குவதற்காக தனியாக ஒரு இடத்தை உருவாக்கி தந்துள்ளார். ஏற்கனவே அதற்கான பாண்டு பத்திரத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வழங்கியுள்ளார்.
 
சென்னையை அடுத்துள்ள மீஞ்சுரில் இடம் வாங்கி கொடுத்து தற்போது அதனை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது” என்று கூறினார்.
 
மேலும் காஞ்சனா 3 படம் 100% வெற்றிவாய்பை பெற அனைவரும் வாழ்த்திக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்