முகப்புகோலிவுட்

தலைவி படத்திற்காக தீவிரமாக பரதம் பயின்று வரும் கங்கனா ரனாவத்!

  | October 08, 2019 18:01 IST
A.l Vijay

துனுக்குகள்

 • தலைவி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது
 • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்
 • இப்படத்திற்காக கங்கனா ரனாவத் பரதம் பயின்று வருகிறார்
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இதனை இயக்குநர் ஏ.எல்.விஜய் படமாக்கி வருகிறார். ‘தலைவி' என பெரிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக அவர் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக கங்கனா ரனாவத் பரதநாட்டியம் கற்று வருகிறார். இதனை உறுதி செய்யும் விதத்தில் சில புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 
அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருதாக தெரிகிறது. கங்கனா ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியாய் செய்ய கூடியவர். மணிகர்னிகா படத்திற்காக வாள் பயிற்சி சண்டை பயிற்சி எல்லாம் கற்று தேர்ந்தே படத்தில் நடித்திருந்தார். அதே போல் தலைவி படத்திற்காகவும் மிக தீவிரமாய் பயிற்சி செய்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com