முகப்புகோலிவுட்

காலம் போற்றும் கவிஞர் கவியரசு கண்ணதாசன்!

  | June 24, 2019 14:49 IST
Kannadasan

துனுக்குகள்

  • கவியரசர் கண்ணதாசனுக்கு வயது 93
  • காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன்
  • அரசியல் வாழ்விலும் ஈடுபடுத்திக்கொண்டவர்
நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் பல்வேறு கவிஞர்கள் வந்து சென்றிருக்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை தக்கவைத்திருந்தனர்.
கவியரசர் கண்ணதாசன் பெற்ற இடம் என்பது முற்றிலும் மாறுபட்டது. ஆம் ஒரு படத்தின் வெற்றியை பாடல்கள் தீர்மானித்த காலத்தை உருவாக்கியவர் கண்ணதாசன். தான் இயற்றிய பாடல்கள் பெரும்பாண்மையானவை தன்னுடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவை என்பதை தன்னுடைய வனவாசம் என்னும் தன்னுடைய சுயசரிதையில் அவர் எழுதியிருக்கிறார்.
 
sl8eo8cg

 
வாழ்கையில் செல்வந்தராகவும், அதே சமயம் எல்லாம் இழந்து பெரும் நெருக்கடியான காலத்தையும் சந்தித்தவர். இவருடைய பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை. உறவுகள், பிரிவு, காதல், காமம், வனவாசம், ஆன்மீகம் என வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும் தன் பாடல்களால் நிரப்பியர். தத்துவப்பாடல்களால் தலைவர்களை உருவாக்கியவர்.
 
okfeb3dg

 
இவருடைய கவிதிறமையை போற்றாதவர்கள் யாரும் இல்லை. வியக்காத ஆளுமைகளும் இல்லை. இவருடைய வரிகளில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்றவை கவிஞரோ சகலத்தையும் வென்றவர். இன்று அவருக்கு 93வது பிறந்தநாள் அவர் மறைந்தாலும் இன்னும் பல நூறு ஆண்டுகள் தன்டைய படைப்புகள் மூலம் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்