முகப்புகோலிவுட்

"மக்கள் தேர்வு செய்த சிறந்த திரைப்படம்" - விருதை தட்டிச்சென்ற போஸ் வெங்கட்டின் 'கன்னி மாடம்'.!

  | September 16, 2020 11:40 IST
Kanni Maadam

துனுக்குகள்

 • நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில்
 • ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும்
 • இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது "Best Movie People Choice 2020"
நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகினர். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 
 
ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த திரைப்படம் டொராண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது "Best Movie People Choice 2020" விருதை தட்டிச்சென்றுள்ளது.  
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com