முகப்புகோலிவுட்

பிக் பாஸ் 4-ல் கலந்துகொள்ளும் VJ ரக்‌ஷன்..?

  | September 16, 2020 16:43 IST
Vj Rakshan

“ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மீண்டும் வருவேன்” என்று ரக்‌ஷன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 4' அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகத் தொடங்கும் என்று வெளியாகியிருக்கும் தகவல், போட்டியாளர்களைப் பற்றிய ஆர்வத்தை பார்வையாளர்களிடையே மிகவுன் உயர்த்தியுள்ளது.

‘பிக் பாஸ் 4' போட்டியாளர்களைப் பற்றிய சுவாரசியமாப தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. தகவல்களின்படி லட்சுமி மேனன், சிவானி நாராயணன், அம்ரிதா ஐயர், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், கே.பி.ஒய் புகஜ், கிரண் ரத்தோட், வசுந்தரா தாஸ், ஆர்.ஜே. வினோத், ஆர்.ஜே.விக்கி, ஷாலு ஷம்மு, ரவீந்தர் சந்திரசேகர், ரம்யா பாண்டியன், ‘டிக் டாக்' இலக்கியா உட்பட கிட்டத்தட்ட 30 பேயர்கள் பட்டியலில் உள்ளன.

இந்நிலையில், இப்போது விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான வி.ஜே மற்றும் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கண்ணும் கண்ணம் கொல்லையடித்தால்' புகழ் நடிகர் ரக்‌ஷன் இந்த ‘பிக் பாஸ் 4'ல் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவர் தனது சொந்த ஊரான கோவையில் இருந்து ஒரு புகைப்படத்தை ரக்‌ஷன் வெளியிட்டார். அப்போது ஒரு பின்தொடர்பாளர் அவரிடம் சமீபகாலமாக விஜய் டிவியில் ஏன் நீங்கள் காணப்படவில்லை என்று கேட்டுள்ளார்.

v0cufshg

அதற்கு பதிலளித்த ரக்‌ஷன் “ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மீண்டும் வருவேன்” என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது ‘பிக் பாஸ் 4' நிகழ்ச்சியாக இருப்பதற்கான வலுவான அறிகுறியாக தெரிகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com