முகப்புகோலிவுட்

ரீ-ரிலீஸ் ஆனது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! Bloopers வீடியோவுடன் அறிவித்த இயக்குநர்.!

  | June 22, 2020 15:39 IST
Desingh Periyasamy

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, நல்ல வசூலையும் ஈட்டிவந்தது. துலகர் சல்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்தார்.

இப்படம் திரையரங்குகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தபோதும், கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டது, மேலும் பூட்டப்பட்டதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா அரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், உலகின் பிற பகுதிகளில் தொற்றுநோயைப் பொறுத்தவரை விஷயங்கள் இயல்பாகி வருவதால், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பிரான்ஸ் நாட்டில் இன்று மீண்டும் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி, இந்த படத்தை மீண்டும் பிரான்சில் வெளியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், சுவாரஸ்யமான ஷூட்டிங் Bloopers வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும், சில நாடுகளில் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வருவது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். முன்னதாக, மே 27-ஆம் தேதி அன்று துபாயில் ‘கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால்' மீண்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்க, இந்த படத்தில் KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com