முகப்புகோலிவுட்

ரஜினியை மிஞ்சிய சூர்யா! பேட்ட படத்தின் சாதனையை முறியடித்த 'காப்பான்'

  | September 23, 2019 11:46 IST
Surya

துனுக்குகள்

  • கடந்த 20ம் தேதி இப்படம் வெளியானது
  • ரஜினியின் பேட்ட படத்தின் வசூலை முறியடித்துள்ளது காப்பான்
  • தமிழகத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது காப்பான்
என்.ஜி.கே படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘காப்பான். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்க இவர்களுடன் ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
சமீப காலமாக வெளிநாடுகளிலும் தமிழ் படங்கள் வசூல் சாதனைப் படைத்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நடிகர் ரஜினியின் படங்கள் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றவை. தற்போது அஜித், சூர்யா உள்ளிட்டவர்களின் படங்களும் வெளிநாடுகளில் திரையிடப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன.
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20ம் தேதி வெளியான 'காப்பான்' படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. முன்னதாக ரஜினியின் 'பேட்ட' படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com