முகப்புகோலிவுட்

அஜித்தின் ‘தக்ஷா’ அணிக்கு கர்நாடக துணை முதல்வர் பாராட்டு.!

  | June 29, 2020 19:15 IST
Thala Ajith

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தக்ஷாவின் இந்த பங்களிப்பு உண்மையிலேயே 'தல' அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு பெருமை தான்.

தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பிரச்சினையாக உள்ளது. வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவுவதை எதிர்த்து அரசு தொடர்ந்து போராடி வருவதால், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல இடங்களில் கிருமி நீக்கம் செய்யும் பணியைத் தொடங்கியது. இதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் நடிகர் அஜித்தின் வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டது என்பதால், ‘தல' அஜித் மற்றும் அவரது குழுவுக்கும் அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

இப்போது, அந்த அணியைப் பற்றிய சமீபத்திய அறிக்கை என்னவென்றால், அவர்களின் தொழில்நுட்பத்தை அண்டை மாநிலமான கர்நாடகாவும் பின்பற்றிவருகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர் அஷ்வத் நாராயணன் நடிகர் அஜித் மற்றும் அவரது அணி ‘தக்ஷா'வைப் பாராட்டியுள்ளார்.

அஜித் மற்றும் தக்ஷா அணியின் முயற்சியைப் பாராட்டி, கர்நாடக துணை முதல்வர் ட்வீட் செய்துள்ளார். அதில் “கோவிட்-19 க்கு எதிராக பெரிய பகுதிகளை கிருமிநாசினி ட்ரோன்கள் வழியாக சுத்திகரிக்க ஒரு வழியை உருவாக்கியதற்காக திரைப்பட நட்சத்திரம் அஜித் குமாரால் வழிநடத்தப்பட்ட அணி தக்ஷாவுக்கு பாராட்டுக்கள். COVID-19க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பம் முக்கியமானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது!” என்று பதிவிட்டுள்ளார்.

77frehu8

கடந்த ஆண்டு ‘ட்ரோன் ஒலிம்பிக்கிஸ்'ல் பதக்கங்களை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆராய்ச்சியாளர்களின் குழு தக்ஷா வென்றது. முன்னதாக, அணியின் உறுப்பினர் ஒருவர், அஜித் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும், அவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம், யுஏவி துறையில் புதிய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை சேகரித்து, அணியுடன் அறிவைப் பகிர்ந்து கொள்கிறார் என்றும் கூறினார். இப்போது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தக்ஷாவின் இந்த பங்களிப்பு உண்மையிலேயே தல அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு பெருமை தான்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com