முகப்புகோலிவுட்

ரசிகரின் இறுதிச் சடங்கில் பொறுக்க முடியாமல் அழுத கார்த்தி..!

  | November 30, 2019 15:43 IST
Karthi Fan

துனுக்குகள்

 • கார்த்தி தனது ரசிகரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.
 • அவரின் ‘தம்பி’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீடி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
 • அவர் அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
நடிகர் கார்த்தி தம்பி ஆடியோ வெளியீட்டுக்கு முன், தனது ரசிகரின் இருதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுடன் நெருக்கமான பிணைப்பில் உள்ளார். மேலும் அவர்களோடு இணைந்து மக்களுக்காக பல நற்பணிகளையும் செய்து வருகிறார். தற்போது, அவர் தான் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படத்தில் ஜோதிகா மற்றும் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்று இப்படத்தின் இசை வெளியீடு என்பதால், இந்த நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஆனால், இன்றைய விடியல் அவருக்கும் சோகமானதாக அமைந்தது. ​​அவரது ரசிகர் வியாசை நித்யா இறந்த செய்தி தான் அது. நித்யா ‘கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின்' சென்னை மாவட்ட அமைப்பாளராக இருந்துள்ளார். அவர் இந்த மன்றத்தின் பெயரில் பல சமூக நலப் பணிகளைச் செய்துள்ளார்.
இன்று அதிகாலை ஒரு பயங்கரமான சாலை விபத்தில், வியாசாய் நித்யா மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த தகவல் கார்த்திக்கு கிடைத்ததும், உடனடியாக உலுந்தூர்பேட்டைக்கு விரைந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது, அவரது ரசிகரின் உடலைப் பார்த்து, உடைந்து போன கார்த்தி, கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும், நித்யாவின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
nmpk0h0g


உலுந்தூர்பேட்டையிலிருந்து திரும்பி வந்தவுடன், கார்த்தி சத்யம் சினிமாஸில் நடக்கும் ‘தம்பி' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் மேடைக்குச் சென்றபோது, ​​தனது ரசிகர் காலமானதைப் பற்றி பேசி, அவரது ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு வந்திருந்த கூட்டத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.
 
கார்த்தி தனது ரசிகர்களிடம் மிக சகஜமாக நட்புடன் பழகிவருகிறார். உண்மையில், அவர் தனது ரசிகர்களின் குடும்ப நிகழ்வுகளில் ஒவ்வொரு முறையும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com