முகப்புகோலிவுட்

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி கொடுத்த கார்த்தி!

  | June 07, 2019 16:05 IST
Karthi

துனுக்குகள்

  • கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தேவ்
  • இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்திருந்தார்
  • தற்போர் ஜோதிகாவிற்கு தம்பியாக நடித்து வருகிறார் கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017 ஏப்ரல் மாதம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
 
இடையில் வழக்கு கட்டிடம் கட்டுவதில் முறைகேடு இருப்பதாகக்கூறி வழக்கத்தொடரப்பட்டது. இதனால் சில மாதங்கள் பணி நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் தடையை நீக்கி மீண்டும் கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
தற்போது இறுதி கட்டத்தில் உள்ள கட்டப்பணிக்கு மேலும் பணம் தேவைப்படுகிறது என்றும் இதற்காக நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி அதில் வரும் வருமானத்தில் கட்டிட வேலையை முடித்துவிடலாம் என முடிவு செய்தனர். ஆனால் நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கியுள்ளதால் நிகழ்ச்சிகள் நடத்த கால அவகாசம் போதவில்லை.
 
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடியும், விஷால் ரூ.25 லட்சமும் வழங்கி உள்ளனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்