முகப்புகோலிவுட்

ஒரே மாதத்தில் டிஜிட்டலில் ரிலீசாகும் ‘கைதி’

  | November 12, 2019 12:14 IST
Karthi

துனுக்குகள்

  • ‘கைதி’ கார்த்தியின் 18-வது திரைப்படமாகும்.
  • இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
  • எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.
வெளியாகி ஒரே மாதத்தில் உங்கள் வீட்டிலேயெ கைதி திரைப்படத்தைப் பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘கைதி' திரைப்படம் சென்ற அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி வெளியானது. விஜயின் ‘பிகில்' திரைப்படத்துடன் போட்டிபோட்டு தீபாவளி விடுமுறைக்காக வெளியானது. 180 கோடி செலவில் பெரிய பட்ஜெட் படமான பிகிலுக்கு இணையாக, வெறும் 27 கோடி ரூபாய் செலவில் தயாரான கைதி போட்டிபோட்டது. முதல் 5 நாட்களுக்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கூட கிடைக்காமல் திண்டாடிய நிலையில், படிப்படியாக ரெட்டிப்பான திரையரங்குகளில் ஓடியது கைதி. போட்ட பணத்தையும் முழுதாக எடுக்க  பிகில் திணரிக்கொண்டிருந்த வேளையில், 2 வாரத்தில் இரு மடங்கு லாபத்தை பெற்றது கைதி.

இந்தநிலையில், பல திரையரங்குகளில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைதி திரைப்படம், வரும் நவம்பர் 25-ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ஹாட்ஸ்டார் மூலம் மொபைல் ஃபோனிலும், ஸ்மார்ட் டிவிகளிலும் குறிப்பிட்டத் தொகையை செலுத்தி எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.
கைதியைப் போலவே, தனுஷின் ‘அசுரன்'  திரைப்படமும் சில திரையரங்குகளில் ஒரு சில காட்சிகளுடன் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் டிஜிட்டலில் ஒரே மாதத்தில் வெளியானது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்