முகப்புகோலிவுட்

அஜித், விஜய், கமல்ஹாசன் யாருக்கு என்ன கதை கார்த்திக் சுப்புராஜ் பதில்….!

  | February 11, 2019 18:08 IST
Karthik Subbaraj Interview

துனுக்குகள்

  • இறைவி, பீட்சா, உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இவர்
  • ரஜினியின் பேட்ட படத்தை இயக்கியவர் இவர்
  • பேட்ட படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்
வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர்  இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்கள் திரை விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ஊடகங்களிலும் பேசும் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தனியார் இணையதள ஊடகத்துக்கு விஜய், அஜித் வைத்து படம் எடுத்தால் எப்படி பட்ட கதையில் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்,
 
நடிகர் விஜய்க்கு மாஸ் கேங்க்ஸ்டர் படம் இயக்குவேன் என்றும், நடிகர் அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன் என்று கூறிய அவர் கமல்ஹாசனுக்கு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதாக தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அஜித்திற்கு காமெடி கதை என்று கூறியிருப்பது அஜித் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்