முகப்புகோலிவுட்

“ஆம்பள இல்லாம ஒரு பெண்ணால தனியா வாழ முடியுமா” அதிரடியாக பதில் சொல்லும் ‘தேவ்’ ட்ரைலர்

  | February 01, 2019 12:14 IST
Karthik

துனுக்குகள்

  • ளம் இயக்குநர் திரு.ராஜித் ரவிசங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்
  • ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்
  • கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள  திரைப்படம் “தேவ்”. இளம் இயக்குநர் திரு.ராஜித் ரவிசங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் திரு.ஹாரிஸ் ஜெயராஜ். கார்த்திக்கு இந்த படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் ஏற்கனவே “தீரன்” படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கார்த்தி எப்போதும் போல் ஜாலியான பைனாக வருகிறார். அட்வென்ச்சர் மொமண்ட் தேடி அலையும் இளைஞராக இருக்கிறார் கார்த்தி.
 
அவர் நண்பர்களோடு இணைந்து செய்யும் சாகசங்களும் கலாட்டாவும் மற்றும்  காதலியை துரத்தும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங் மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வருவார் போலிருக்கிறது.
 

 இருவருக்கும் காதல் சூடுபிடிக்க பல களேபரங்கள் ஏற்படுகிறது.   அதை எவ்வாறு கார்த்தி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதையாக இருக்கும் போலிருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடலும், பின்னணி இசையும் மிரட்டுகிறது.  நல்ல காமெடி விருந்து கலந்த ஆக்ஷன் திரைப்படமாக தேவ் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை காட்டுகிறது இத்திரைப்படத்தின் ட்ரைலர். 
 
ஒரு காட்சியில் ஒரு ஆண் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியுமா என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அதிரடியாக ஒரு பதிலை அளிக்கிறார் ப்ரீத் சிங். இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இந்த கேள்வியையே கேட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்று சவுக்கடி கொடுக்கும் பதிலாக அந்த காட்சி இருக்கிறது. கார்த்தியின் தேவ் திரைப்படம் நல்ல விருந்தாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்