முகப்புகோலிவுட்

கார்த்தியின் ‘கைதி’ படத்தின் முக்கிய அப்டேட்?

  | August 20, 2019 19:08 IST
Karthi

துனுக்குகள்

  • விஜய்யின் 64வது படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்
  • கைதி படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளனர் படக்குழுவினர்
  • கைதி படம் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது
'மாநகரம்' படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் வித்யாசமான திரைப்படம் ‘கைதி'. ஒரே இரவில் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான கதைதான் இப்படம். ‘தேவ்' படத்தை அடுத்து கார்த்தி இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்த படத்தின் இன்னொரு சிறப்பு இந்தப் படத்தின் நாயகி என யாரும் கிடையாது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து அசத்தி இருக்கிறது படக்குழு. சில நாட்களுக்கு முன்பு, இரண்டு காட்சிகளை மட்டும் படமாக்கப்பட்டன. எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 'கைதி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. தற்போது செப்டம்பர் 27-ம் தேதி வெளியிடலாம் என்று விநியோஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இன்னும் ஓரிரு நாட்களில் இது முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
 
இந்தப் படத்தை முடித்துவிட்டு 'தளபதி 64' படத்தில் கவனம் செலுத்த உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்