முகப்புகோலிவுட்

‘கர்ணன் வெளிவரக்கூடாது, மாரி செல்வராஜை கைது செய்' - தனுஷ்க்கு செக் வைத்த கருனாஸ்..!!

  | February 20, 2020 17:42 IST
Karnan

"சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரிசெல்வராஜை கைது செய்ய வேண்டும்"

‘பரியேறும் பெருமாள்' திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கர்ணன்'. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் வேகமாக தனுஷ் உள் நுழைவது போன்ற படப்பிடிப்புக் காட்சி ஒன்று இணையத்தில் நேற்று வெளியானது. 

அதையடுத்து, இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும், இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் எனவும், நடிகர் கருனாஸின் அரசியல் கட்சியான ‘முக்குலத்தோர் புலிப்படை' சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை மனுவில் “1991-ல் கொடியன் குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் அந்த திரைப்படத்தில் மணியாச்சி கலர் காவல் நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com