முகப்புகோலிவுட்

தனது ஹீரோயீனுக்கு வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின்.!

  | May 14, 2020 20:02 IST
Kavin

'லிஃப்ட்' திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

சின்ன திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புடன் வலம்வந்தவர் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கான விசிறிகள் அளவு அதிகரித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இலங்கை தமிழச்சி லாஸ்லியா மீது காதல் கொண்டார். பிக் பாஸில் இவர்களின் காதல் கதை ஒரு தனிக்கதை. 

அதற்கு பின் தற்போது லாஸ்லியா கதாநாயகியாக மாற, ஏற்கனவே ‘நட்புன்னா என்னனு தெரியுமா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவின், பிக் பாஸிற்கு பிறகு தற்போது புதிய திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பிகில்' பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் புட்டுதல் நடைமுறையில் உள்ல நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல நடிகர் நடிகைகள் உட்பட ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.

அதேபோல், நடிகர் கவினும் தனது ஹீரோயீனுக்கு வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ கால் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் “ஹாப்பி பொறந்தநாள் பட்டி.. ஸ்பாட்ல செம ஃபோக்கஸ்டா இருந்ததால ஒரு ஃபோட்டோ கூட எடுக்கல நாங்க.. இப்போ தான் வேலையே இல்லையே.. அதான் கஷ்டப்பட்டு வீடியோ கால்ல எடுத்துட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

EKAA என்டர்டைன்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் வழங்கும் இந்த படத்தினை இயக்குகிறார் வினீத் வரப்பரசாத், ஹெபிஜி இந்த படத்தைத் தயாரித்து வருகிறார். வெகு நாட்கள் கழித்துக் களமிறங்கும் கவினுக்கு இது முக்கியமான திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, ‘லிஃப்ட்' படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியானது. மேலும் இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com