முகப்புகோலிவுட்

"நகலெடுக்க முடியாத உடல்மொழி" - கவிதை நடையில் சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய கவிப்பேரரசு..!

  | August 10, 2020 14:24 IST
45 Years Of Rajinism

துனுக்குகள்

 • இந்நிலையில் பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து
 • 1980ம் ஆண்டு வெளியான ரஜினியின் காளி என்ற படத்தில் வந்த
 • 2014ம் ஆண்டு வெளியான 'லிங்கா' படம் வரை பல படங்களில் அவரோடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்ததை தற்போது வரை அவரது ரசிகர்களும் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைய வழியில் கொண்டாடி வருகின்றனர். மேலும் அனைவரின் வாழ்த்துக்களை ஏற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று குறிப்பிட்டு "என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி." என்று ட்வீட் செய்திருந்தார். 

இந்நிலையில் பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "நகலெடுக்க முடியாத உடல்மொழி, சூரியச் சுறுசுறுப்பு கிழவி குழவியென வசப்படுத்தும் வசீகரம். 45 ஆண்டுகளாய் மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம். இரண்டுமணி நேரத்தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப் பிடிகொடுக்காத பிடிவாதம். இவையெல்லாம் ரஜினி; வியப்பின் கலைக் குறியீடு.!" என்று கவிதை சொல்லி வாழ்த்தியுள்ளார். 

பாஷாவோட பெயரை சொன்னால் அரபிக்கடல் நடுங்கும் பாரு... நாசிக் நகரில் நோட்டு அடிச்ச அதில் பாஷாவிற்கும் பங்கு பாரு.. இவன் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா போன்ற வரிகளை சூப்பர் ஸ்டார்க்கு எழுதி அசத்தியுள்ளார் வைரமுத்து. 1980ம் ஆண்டு வெளியான ரஜினியின் காளி என்ற படத்தில் வந்த 'பத்ரகாளி' என்ற பாடல் தொடங்கி 2014ம் ஆண்டு வெளியான 'லிங்கா' படம் வரை பல படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com