முகப்புகோலிவுட்

லாவகமாக பிக்பாக்கெட் அடிக்கும் பரியேறும் பெருமாள் ஜோ…?

  | April 06, 2019 17:34 IST
Alaudhinin Arputha Camera

இந்த படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி

‘மூடர் கூடம்' படத்தை தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா'. இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘பரியேறும் பெறுமாள்' ஆனந்தி நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலெர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
 
ஏப்ரல் 19ந்தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தில் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com