முகப்புகோலிவுட்

'விவேகத்துடன் வைத்திருக்க ஒர்க் அவுட்' - Fitnessல் அசத்தும் பிக் பாஸ் பிரபலம்..!!

  | July 03, 2020 08:41 IST
Quarantine Work Out

துனுக்குகள்

  • தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட
  • பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள்
  • இந்த லாக் டவுன் காலத்தில் பிட்னெஸ் பயிற்சியில் இறங்கியுள்ளார்
தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் சாக்ஷி அகர்வால். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த பீக்பாஸ் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளும் சிக்கி போட்டியிலிருந்து வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேறினார்.  
 
பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

அனுதினமும் போட்டோஷூட் போட்டு அசத்தும் அவர் இந்த லாக் டவுன் காலத்தில் பிட்னெஸ் பயிற்சியில் இறங்கியுள்ளார். பல நல்ல கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பது போலவே அனுதினம் தான் ஒர்க் அவுட் செய்யும் காணொளிகளையும் வெளியிட்டு அசத்தி வருகின்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com