முகப்புகோலிவுட்

"அமைதியாக இருப்பதில் எந்த பயனும் இல்லை" - மக்கள் செல்வியின் விழிப்புணர்வு ட்வீட்.!

  | September 15, 2020 14:25 IST
Domestic Violence

துனுக்குகள்

 • சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி
 • இந்த சிக்கலான ஊரடங்கு நிலவும் காலத்தில் தனது சமூக வலைத்தளங்கள்
 • domestic violence அதிகரித்துள்ளது. நாம் அமைதியாக இருப்பதில் எந்த பயனும்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு, பாலா இயக்கத்தில் வெளியான தாரைத்தப்பட்டை, மற்றும் சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோன்று ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் அளவிற்கு குறுகிய காலத்தில் இவர் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளது இவரின் சிறப்பு. 

இந்த சிக்கலான ஊரடங்கு நிலவும் காலத்தில் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் பல விழிப்புணர்வுகளையும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்தும் அடிக்கடி இவர் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் save shakthi என்ற நிறுவனத்தையும் இவர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் " இந்த லாக் டவுன் காலத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக பெண்களுக்கு எதிரான domestic violence அதிகரித்துள்ளது. நாம் அமைதியாக இருப்பதில் எந்த பயனும் இல்லை. ஆகவே இந்த விஷயத்தில் நாமாக முன்வந்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.  
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com