முகப்புகோலிவுட்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பென்குயின்' படத்தின் அப்டேட் !

  | November 07, 2019 12:17 IST
Keerthi Suresh

துனுக்குகள்

  • இந்தியின் மைதான் படத்தில் நடித்து வருகிறார் இவர்
  • மோகன்லால் நடிக்கும் மலையாள படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்
  • பென்குயின் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் தயாரிக்கும் படம் 'பென்குயின்'. இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் கவணம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் இவர் இணைந்துள்ள படம்தான் ‘பெண்குயின்'.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

அதாவது சுமார் 53 நாட்களுக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதனிடையே இந்தப் படம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணி வேலைகள் தொடங்கப்பட்டு விரைவில் பணிகளை முடித்து படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தேசிய விருதுக்குபின் பல்வேறு மொழிப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்