முகப்புகோலிவுட்

அடேங்கப்பா!! தொடர்ந்து 150 முறை சூரிய நமஸ்காரம் செய்த கீர்த்தி! தெறிக்கவிடும் Timelapse..

  | August 28, 2020 22:34 IST
Keerthy Suresh

"அடுத்த இலக்கு 200 முறை தொடர்ந்து செய்வது தான்"

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடங்க மக்களை ஊக்குவிக்கப்படும் இந்த காலக்கட்டத்தில், பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறார்கள். உடற்பயிற்சிக்கன பயணத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது முதல், உடற்பயிற்சி தொடர்பான சவால்களை எடுக்க ரசிகர்களை அழைப்பது வரை, பிரபலங்கள் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில், கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் தங்கள் உடல் மற்றும் மன மாற்றங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் தங்களால் முடிந்த சமூக நலன்களைச் செய்துள்ளனர் என்றே கூறவேண்டும்.

இப்போது, கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் யோகசன பயிற்சியில் மிகவும் சிறப்பானதாக அறியப்படும் ‘சூரிய நமஸ்காரத்தை செய்வதைக் காணலாம். அவர் பகிர்ந்த இந்த வீடியோவின் ஸ்பெஷல் என்னவென்றால், இடைவெளி இன்றி தொடர்ந்து 150 முறை சூரிய நமஸ்காரம் செய்துள்ளார்.

அவர் தனது பதிவில், “150 சூரிய நமஸ்காரத்துடன் நாளை தொடங்குவது போல் எதுவும் இல்லை. அடுத்த இலக்கு 200 முறை செய்வது! இது எவ்வளவு மிதமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் என்பதை வெளிப்படுத்த முடியாது. தெரியாதவர்களுக்கு, இது உங்கள் எல்லா சக்கரங்களையும் அறிவூட்டுகிறது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதற்குமேல், நீங்களும் இதை ஒருமுறை செய்ய வேண்டும், இது என்னவென்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள்!” என்று கூறியுள்ளார்.

பணி முன்னணியில், இப்போது ரஜினியின் ‘அண்ணாத்த' படத்தில் நடித்துவரும் கீர்த்தி, மேலும் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்', மிஸ் இந்தியா, குட் லக் சகி, ரங் தே ஆகிய படங்களையும் வரிசையாக கொண்டுள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com