முகப்புகோலிவுட்

கார்த்திக் சுப்புராஜுடன் கை கோர்க்கும் கீர்த்தி சுரேஷ்?

  | July 22, 2019 22:04 IST
Karthik Subbaraj

துனுக்குகள்

  • ரஜினியை அடுத்து தனுஷை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்
  • மேயாத மான் படத்தை அடுத்து ஐஷ்வர்யா ரஜேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்
  • தனுஷை வைத்து இவர் இயக்கும் படம் அடுத்த மாதம் படிப்பிடிப்பு தொடங்குகிறது
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
 
ரஜினியை அடுத்து இவர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களை இயக்குவதோடு நல்ல படைப்பாளிகளின் படைப்புகளை கொண்டுவரும் விதத்தில் தயாரிப்பு வேலையிலும் இயங்கி வருகிறார். அதன் அடிப்படையில் இவர் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மேயாத மான்'. இதனை அடுத்து  ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். வேதாளம் சொல்லும் கதை படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இந்த படத்தை இயக்குகிறார்.
 
இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆதாராபூர்வமான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்