முகப்புகோலிவுட்

இன்ஸ்டாவில் புதிய மைல்கல்லை எட்டிய கீர்த்தி சுரேஷ்.!

  | May 22, 2020 20:33 IST
Keerthy Suresh

தற்போது தெலுங்கில் குட் லக் சகி, ரங் தே மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 168-வது திரைப்படமான ‘அண்ணாத்த'வில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய கீர்த்தி சுரேஷ், ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சண்டகோழி 2 என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

அதையடுத்து, 2018-ஆம் ஆண்டில் நடிகையர் திலகம் (மகாநடி) படத்தில் புகழ்பெற்ற நடிகை சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், இப்படத்துக்காக  சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார்.

தற்போது, பூட்டுதல் காரணமாக வீட்டில் இருக்கும் கீர்த்தி, தனது பொழுதுபோக்கைப் பிடிப்பதன் மூலமும், குடும்ப உறுப்பினர்களுடன் அரட்டையடிப்பதன் மூலமும், தினசரி உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவதன் மூலமும், தனது அழகான நாய் ‘நைக்' உடன் விளையாடுவதன் மூலமும் தனது லாக்டவுன் வாழ்க்கையை செலவிடுகிறார்.

இந்நிலையில், அவர் தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றொரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது, கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்களை அடைந்துள்ளார். அதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு குட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கடைசியாக  விஜய்யின் ‘சர்க்கார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து மிஸ் இந்தியா, பென்குயின், மேலும் மலையாளத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்களில் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர், தற்போது தெலுங்கில் குட் லக் சகி, ரங் தே மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 168-வது திரைப்படமான ‘அண்ணாத்த'வில் நடித்து வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com