முகப்புகோலிவுட்

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

  | September 12, 2019 20:13 IST
Keerthy Suresh 24

துனுக்குகள்

 • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்
 • தேசிய விருக்கு பின் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் தமிழ் படம் இது
 • இது கீர்த்தி சுரேஷின் 24வது படம்
ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கொடைகாணலில் தொடங்கியது. இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.
 
“தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும்  பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com