முகப்புகோலிவுட்

கார்த்திக் சுப்புராஜ்வுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

  | August 12, 2019 21:19 IST
Keerthy Suresh

துனுக்குகள்

  • சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெருகிறார் கீர்த்தி சுரேஷ்
  • கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்
  • ஈஸ்வர் கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்
இந்த ஆண்டு பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருடைய தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பென்ச்' நிறுவனம் சார்பாக 3 வது படைப்பை வழங்க இருக்கிறார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 
 
கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை  தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படம் திரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. கார்த்திக் பழனி இப்படத்தின் ஒளிப்பதிவு பனிகளை கவனிக்க அனில் கிரிஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
 
மேலும் இப்படத்தில் இணையவிருக்கும் பிரபலங்கள் குறித்து விரைவில் செய்தி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இந்தாண்டு பெருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்