முகப்புகோலிவுட்

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் இளம் நடிகை..! ‘தலைவர் 168’ லேட்டஸ்ட் அப்டேட்..!

  | December 10, 2019 08:29 IST
Thalaivar 168

துனுக்குகள்

  • தலைவர் 168 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
  • இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
  • இப்படத்தில் பரோட்டா சூரி இணைந்துள்ளார்.
ரஜினிகாந்தின் ‘தலைவர் 168' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இளம் கதாநாயகி இணைந்துள்ளார்.

தர்பார் திரைப்படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படத்துக்கு ‘தலைவர் 168' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘பேட்ட' திரைப்படத்துக்குப் போட்டியாக வெளிவந்த ‘விஸ்வாசம்' திரைப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். மேலும், இப்படத்தை ரஜினியின் எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், பிரபல காமெடி நடிகர் ‘பரோட்டா' சூரி இணைந்துள்ளார். இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு இடையில் ஜோதிகா மற்றும் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும், மேலும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், வதந்தியாக இருந்த செய்தி தற்போது உன்மையாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இணைந்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ தகவலை சன் சிக்சர்ஸ் நிறுவனம் தற்போது, அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆனால், அவர் ரஜினிக்கு ஜோடியாவாரா என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘நடிகையர் திலகம்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தலைவர் 168 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com