முகப்புகோலிவுட்

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ லேட்டஸ்ட் அப்டேட்..!

  | January 25, 2020 15:07 IST
Soorarai Pottru

துனுக்குகள்

  • சூரரைப் போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
  • இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
  • இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘சூரரைப் போற்று' திரைப்படத்தின் கேரளா திரையரங்க உரிமையைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று'. இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திலிருந்து சூர்யா பாடிய ‘மாறா தீம் ' பாடல் நேற்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் கேரள திரையரங்க உரிமையை ‘ஸ்பார்க் பிக்சர்ஸ்' பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்