முகப்புகோலிவுட்

KGF 2 இசை பணி துவக்கம்.! ஃபோட்டோ வெளியிட்ட தயாரிப்பாளர்.!

  | May 19, 2020 14:08 IST
Kgf 2

இப்படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆகியோருடன் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார் கார்த்திக்.

கடந்த 2018-ஆம் ஆண்டு 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடித்து வைரல் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1. கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதி பிரஷாந்த் நீல் இயக்கினார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் முதல் பாகத்தின் இறுதி கட்சியைப் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், சமீபத்தில் கே.ஜி.எஃப் : சாப்டர் 2 வரும் அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோம்பலே பிலிம்ஸை சேர்ந்த கார்த்திக் கவுடா, சமீபத்தில்  தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸருக்கு நேரம் இருக்காது, வெளியீட்டிற்கு முன் ஒரு டிரெய்லர் இடி போல வெளியிடப்படும் என ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

தற்போது கன்னட திரையுலகம் சில போஸ்ட் புரொடக்‌ஷன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், KGF2  படக்குழுவும் இசைக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், ஒளிப்பதிவாளர் புவன் கவுடா மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆகியோருடன் ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கும் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் கார்த்திக் கவுடா போட்ட இந்த ட்வீட், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com