முகப்புகோலிவுட்

கே.ஜி.எஃப் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! படக்குழு அதிரடி முடிவு!

  | September 07, 2019 15:24 IST
Kgf 2

துனுக்குகள்

  • இப்படம் வழக்கு தொடர்பாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
  • வழக்கு பிரச்னையால் இப்படத்தின் படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றம்
  • பிரம்மாண்ட செலவில் இப்படம் தயாராகி வருகிறது
நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எஃப்'. இப்படம் வெளியான நான்கு நாட்களில் 100 வசூல் சாதனைப் படைத்தது.
 
கன்னடத்தில் 100 கோடி ரூபாய் வசூல் படைத்த முதல் படம் என்கிற பெருமையையும் இப்படம் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிகுந்த பொருட்செலவில் எடுத்து வருகிறது படக்குழு. இதற்காக கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கபபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் தற்காலிகமாக  இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இதனைத் அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பை வேறு இடத்தில் தொடர படக்குழு முடிவு செய்துள்ளது அதன்படி ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடக்கும் என்று அறிவித்துள்ளத படக்குழு.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்