முகப்புகோலிவுட்

மிருகத்தனமான ‘KGF-2’ வில்லன்; வெளியானது ‘ஆதீரா’ First look!

  | July 29, 2020 12:04 IST
Kgf 2

இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஆதீரா' தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் வெளியான கன்னட திரைப்படமான ‘கே.ஜி.எஃப் சாப்டர் 1' ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கியது. இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த பிளாக்பஸ்டர் ஆனது மற்றும் இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் டப்பிங் பதிப்புகளிலும் பெரும் வெற்றி பெற்றது. இப்போது, கே.ஜி.எஃப் படத்தின் தொடர்ச்சியான ‘சாப்டர் 2' தயாராகி வருகிறது.

இதன் முதல் பாகத்தில் ராமச்சந்திர ராஜூ வில்லனாக நடித்திருந்தார். இப்போது, இரண்டாம் பாகத்தில் பிரதான வில்லன் ஆதீரா கதாபாத்திரம் உள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆதீராவாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கே.ஜி.எஃப்-2 ஆம் அத்தியாயத்திலிருந்து ஆதீராவாக சஞ்சய் தத்தின் தோற்றத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மிரட்டலான போஸ்டர் தற்போது செம வைரலாகி வருகிறது. ‘கே.ஜி.எஃப் அத்தியாயம் 2'ல் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் மற்றும் அனந்த் நாக் ஆகியோரும் நடிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com