முகப்புகோலிவுட்

“டீஸருக்கு வாய்ப்பே இல்லை” KGF-2 படக்குழு அறிவிப்பு..!

  | April 18, 2020 13:54 IST
Kgf 2

கே.ஜி.எஃப் : சாப்டர் 2 வரும் அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடித்து வைரல் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1. கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதி பிரஷாந்த் நீல் இயக்கினார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். கன்னடத்தில் வெளியான படம் என்றபோதும் தமிழில் இந்த படத்திற்கும் நடிகர் யாஷ்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த படத்தின் முதல் பாகத்தின் இறுதி கட்சியைப் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், சமீபத்தில் கே.ஜி.எஃப் : சாப்டர் 2 வரும் அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இப்படத்தின் போஸ்டரை கொண்டாடிய ரசிகர்கள், அடுத்ததாக இபடத்தின் டீஸர் அல்லது ட்ரைலருக்காக வெறிகொண்டு காத்துக்கிடக்கின்றனர்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, அனைத்து படங்களின் அப்டேட்களும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹோம்பலே பிலிம்ஸை சேர்ந்த கார்த்திக் கவுடா, தனது ட்விட்டர் பக்கத்தில் “KGF: Chapter-2 டீஸருக்கு நேரம் இருக்காது. வெளியீட்டிற்கு நெருக்கமாக எங்களிடமிருந்து ஒரு டிரெய்லர் இடி போல வெளியாகும். எனவே வீட்டிலேயே இருங்கள், இப்போது பாதுகாப்பாக இருங்கள். முன்னேறுவோம்” என பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com