முகப்புகோலிவுட்

பூஜையுடன் தொடங்கிய ‘கேஜிஎஃப்” பார்ட் 2…! உற்சாகத்தில் ரசிகர்கள்

  | March 13, 2019 18:27 IST
Kgf Part 2

துனுக்குகள்

 • இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்
 • இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது
 • பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார்
கடந்த ஆண்டு  டிசம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் ‘கேஜிஎஃப். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
 
தங்கச்சுரங்கத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருக்கும் மக்களை மீட்டு யஷ் எப்படி கோடீஷ்வரனாக மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கரு. விறுவிறுப்பான சண்டைகாட்சிகளில் படம் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக அமைந்திருந்தது. இந்த படம் முடிவுறாமல் இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கிய எதிர்பார்ப்பு இப்படத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில்
 
 ‘கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகம் (பகுதி 2), பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியது. பெங்களூரு விஜய நகரில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பட பூஜை நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com