முகப்புகோலிவுட்

இணையத்தில் லீக்கான ரஜினியின் தனிப்பட்ட அழைப்பு; அதிருப்தியில் தேசிங்கு பெரியசாமி.!!

  | July 31, 2020 19:30 IST
Desingh Periyasamy

சூப்பர் ஸ்டாருக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் சோஷியல்  மீடியாவில் கசிந்தது குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, நல்ல வசூலையும் ஈட்டிவந்தது. துல்கர் சல்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்தார். குறிப்பாக இந்த படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ள தேசிங்கு பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இயக்குநர் தேசிங்கு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை KKK படத்தின் முதல் காட்சியிலேயே நிரூபித்திருப்பர். 

அண்மையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூப்பர்... excellent.. பெரிய future இருக்கு உங்களுக்கு என்று கூறிய சூப்பர் ஸ்டார், மேலும் தனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று அவரிடம் கூறியது தேசிங்கு அவர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுசென்றது. இந்த ஆடியோ இணையத்தில் லீக்கனதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. மேலும், ரஜினிகாந்த் பாராட்டியதற்காக மேலும் இயக்குநருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

இந்நிலையில், சூப்பர் ஸ்டாருக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் சோஷியல்  மீடியாவில் கசிந்தது தனக்கு வருத்தமளிப்பதாக தேசிங்கு பெரியசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் “விஷ் பண்ண எல்லாருமே ‘என்கிட்டயே தலைவர் பேசின மாதிரி அவ்ளோ சந்தோஷம்னு சொல்றாங்க' இவ்வளவு அன்பு காட்டுவதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த உரையாடல் கசிந்ததில் எனக்கு மகிழ்ச்சி இல்லை, காரணம் அது எனக்கான தனிப்பட்ட அழைப்பு. என்னுடைய ட்வீட்டில் கூட தலைவரின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது. எல்லாம் நனமைக்கே. மீண்டும் ஒருமுறை உங்கள் எல்லோருடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com