முகப்புகோலிவுட்

பண்டிகை நாளில் வெளியாகும் SK-வின் ‘டாக்டர்’..!

  | May 19, 2020 17:31 IST
Sivakarthikeyan

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

பி. எஸ். மித்ரன் இயக்கிய ‘ஹீரோ' என்ற அதிரடி சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கடைசியாக திரையில் காணப்பட்டார். அதையடுத்து, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்' மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களில், அயலான் நீண்ட காலமாக தாமதமாகிவிட்டாலும், தற்போதைய அறிக்கையின்படி ‘டாக்டர்' திரைப்படம் முதலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கோலாமாவு கோகிலா'வுடன் அறிமுகமான நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தை, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com