முகப்புகோலிவுட்

மார்வெல் உலகம் தமிழ் நாட்டிற்கு வந்தால்.... கோலிவுட் சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்!!

  | March 15, 2019 11:00 IST
Marvel Avengers

நம்ம கோலிவுட் நடிகர்களை வைத்து அவெஞ்சர்ஸ் படம் உருவாக்கினால் எந்த ஹீரோ எந்த சூப்பர்ஹீரோவாக இருப்பார்கள் என கற்பனையாக...!

சூப்பர் ஹீரோக்களால் நிறைந்தது அவெஞ்சர்ஸ் படம். ஹாலிவுட்டை மட்டுமே கலக்கும் அவெஞ்சர்ஸ் படத்திற்கு போட்டியாக நம்ம கோலிவுட் நடிகர்களை வைத்து அவெஞ்சர்ஸ் படம் உருவாக்கினால் எந்த ஹீரோ எந்த சூப்பர்ஹீரோவாக இருப்பார்கள் என கற்பனையாக...!

ஐயன் மேன் (Iron Man) - தளபதி விஜய்

50pj5rj8

அதிரடியுடன் கலந்த ஹியூமர் தான் ஐயன் மேனின் ட்ரேட் மார்க். அதிரடியுடன் ஹியூமர் சென்ஸ் (கில்லி, வசீகரா, ஃப்ரண்ட்ஸ்) உடையவர்களில் விஜயை மிஞ்ச யார் உண்டு. அவெஞ்சர்ஸ் உலகின் மிக முக்கிய கிட்டதட்ட தலைவர் அந்தஸ்த் உடையவர் ஐயன் மேன், அதுவே கோலிவுட்டில் தளபதிக்கும். மேலும் ஐயன் மேனாக விஜய் தான் கரெக்ட் என நாங்கள் மட்டும் இல்லை கதாநாயகிகள் சமந்தா, காஜல் ஆகியோரும் மார்வெல் நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா (Captain America) - சூர்யா சிவக்குமார்

0fkmuv

முன்னாள் இராணுவ வீரரான கேப்டன் அமெரிக்கா, சிங்கிள் பசங்களின் வழிக்காட்டி, அதுவே நம்ம சூர்யாவிற்கும் பொருந்தும். தனி ஆளாக போராடுவது, செதுக்கிய உடம்பு (வாரணம் ஆயிரம்), சிங்கிள் பாய் மற்றும் நண்பனுக்காக கர்ணனாக இருப்பது (ஃப்ரெண்ட்ஸ், பிதாமகன்) என சூர்யா கேப்டன் அமெரிக்காவாகவே மாறி விடுவார். ஹாலிவுட் உலகில் ஐயன் மேனை எதிர்த்து போராடுவார் கேப்டன் அமெரிக்கா. கோலிவுட் உலகில் அது நடந்தால், கோலிவுட் ஐயன் மேனை (விஜய்) எதிர்க்கும் திறன் இந்த கேப்டன் அமெரிக்கா (சூர்யா) விற்கு மட்டுமே.

தோர் (Thor Odinson) - தல அஜித் குமார்

7frt5dr8

அவெஞ்சர்ஸ் உலகின் உண்மையான கடவுள் தோர் தான். தனி ஆளாக ஒரு கிரகத்தையே காப்பாற்றும் வல்லமை படைத்தவர் தோர். லோகி, சொந்த அக்கா என பலர் முதுகில் குத்தினாலும் அதனை எல்லாம் தாங்கி எழுச்சி கண்டு, தானோஸை வீழ்த்தும் வல்லமை படைத்த ஒரே அவெஞ்சர் தோர். தோரின் அனைத்து குணாதிசயங்களும் ஒன்றே பெற்ற கோலிவுட் சூப்பர்ஹீரோ நம்ம தல தான் (வாலி, வேதாளம்) என்றால் அது மிகையாகாது. இடி கடவுள் தோர் என்றால், ஸ்கிரின் பிரசென்ஸ் மூலமே இடிக்கு சமமான பவரை (பில்லா) பாய்ச்ச கூடியவர் நம்ம தல அஜித்.

ஹல்க் (Hulk) - சீயான் விக்ரம்

d92po8pg

அமைதியான ப்ரூஸாக ஒரு வடிவம், அட்டுழியம் செய்யும் ஹல்க் ஆக மற்றுமொரு பரிமாணம் பெற்றது ஹல்க் சூப்பர்ஹீரோ. ஹாலிவுட் ஹல்க்-க்கு சிஜிஐ பல செய்ய வேண்டும். ஆனால் நம்ம சீயான் (பீமா, ஐ) நினைத்தால், சிஜிஐ எதுவும் இல்லாமலே இரண்டு வெவ்வேறு பரிமாணங்களையும் அல்வா சாப்பிடுவது போல் செய்து விடுவார். ஒரு தலை காதல், தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை என ஹல்க்-க்கு உரிய அனைத்து அம்சங்களையும் தன் பாணியில் அசல்டாக விக்ரம் (சேது) செய்து விடுவார்.

ப்ளாக் விடோ (Black Widow) - சமந்தா

1ecf3fm8

அழகான சூப்பர்ஹீரோ ப்ளாக் விடோக்கு கோலிவுட் உலகில் டாப் சாய்ஸ் சமந்தா தான். ப்ரூஸ் மீது ஒரு அக்கறை, ஸ்பையாக திறமை பெற்ற ப்ளாக் விடோ, வயசாகாமல் இருக்கும் சக்தியும் பெற்ற சூப்பர்ஹீரோ. பாணா காத்தாடி சமந்தாவை விட யூ டர்ன் சமந்தா இளமையாக தான் தெரிகிறார். முகத்தில் ஒரு அப்பாவி தனமும் சக்தியும் பெற்ற பெண் சூப்பர்ஹீரோ ப்ளாக் விடோ. கோலிவுட்டில் இவை பொருந்துவது சமந்தாவிற்கு தான்.

ஹாக் ஐ (Hawk Eye) - ஆர்யா

b3q51sug

ஹாக் ஐ சூப்பர்பவர் இல்லாத மனித சூப்பர்ஹீரோ என கூறலாம். தன்னுடைய அசாத்திய பவர், அம்பு திறமை, கரெக்ட் எய்ம்களால் அவெஞ்சர்ஸ் உலகில் சூப்பர்ஹீரோவாக வலம் வருபவர் ஹாக் ஐ. கோலிவுட்டில் அதற்கு ஆப்ட் ஆர்யா தான். சாதாரண நடிகராக வலம் வந்த ஆர்யா, தன்னிடம் ஒரு அசாத்திய சூப்பர்ஹீரோ இருக்கிறான் என நான் கடவுள் படம் மூலம் நிரூப்பித்தார்.

நிக் ஃப்யூரி (Nick Fury) - ரஜினிகாந்த்

53a16sp

சூப்பர்ஹீரோகளாக இருப்பதை விட அந்த சூப்பர்ஹீரோகளை ஒருங்கிணைத்து அவர்களை வழி நடத்துவது தான் மிக கடினம். அதை நம்ம தலைவர் ரஜினிகாந்தை தவிர வேறு யாரால் செய்ய முடியும். நிக் ஃப்யூரி நினைத்தால் சூப்பர்ஹீரோகளை ஆக்கவும் முடியும் அழிக்க முடியும். கோலிவுட்டில் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர் நம்ம தலைவர் தானே.

தானோஸ் (Thanos) - கமல் ஹாசன்

md7s4mpo

அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோகளை அழிக்கும் வல்லமை படைத்தவர் தானோஸ். கோலிவுட்டின் ஆண்டவரே கமல் தானே. அழிக்கும் வல்லமை படைக்கும் சிவனாக கல்ட் கிளாசிக் (அன்பே சிவம்) நல்லசிவம் கமல் தான். மேலும் தானோஸ் உடம்பில் மட்டும் வலிமையானவன் இல்லை, மதியிலும் வல்லவர். கோலிவுட்டின் ஆக சிறந்த கலைஞன் கமல் தானே. உடலிலும் உனர்விலும் மதியிலும் வல்லவர் (ஆளவந்தான்) கமல் தவிர வேறுயாறு.

ஸ்பைடர்-மேன் (Spider-Man) - ஜீவா

o229mk0g

அனைவரது ஃபேவரட் சூப்பர்ஹீரோ, ஸ்பைடர்-மேன். ஐயன் மேனை தன் தந்தையாகவே பாவித்துவரும் சூப்பர்ஹீரோ ஸ்பைடர் மேன். உண்மையில் ஐயன் மேனும் ஸ்பைடர்-மேனும் சிறந்த நண்பர்கள். கோலிவுட் உலகின் ஜாலி நாயகன் (சிவா மனசில் சக்தி) ஜீவா தான். மற்றும் ஐயன் மேன் ஸ்பைடர்-மேன் காம்போவும் இதில் கரக்டாக இருக்கும் (நண்பன்) என்றால் அது இவராக தான் இருக்கும்.

ப்ளாக் பேந்தர் (Black Panther) - விஷால்

ist893ag

அவெஞ்சர்ஸ் உலகின் வித்தியாசனமான தனித்துவமான சூப்பர்ஹீரோ ப்ளாக் பேந்தர். வாகாண்டா தலைவரான ப்ளாக் பேந்தர், தனக்கென ஒரு தனி உலகையே உருவாக்கியிருப்பார். மேலும் அவெஞ்சர்ஸ் உலகின் கருப்பு சூப்பர்ஹீரோ ப்ளாக பேந்தர் தான். கோலிவுட் உலகின் கருப்பு சூப்பர்ஹீரோ (ஆம்பள), விஷால் மட்டும் தானே. ஆக்ஸன் (திமிரு) மற்றும் எமோசன்ஸ் (இரும்புதிரை) ஒன்றே பெற்ற விஷால் நடிகர், தயாரிப்பாளர், தலைவர் என சூப்பர்ஹீரோவாகவே வாழ்ந்து வருகிறார்.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor Strange) - மாதவன்

rk6l2vs8

அறிவான சூப்பர்ஹீரோ டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அறிவுடன் அழகும் பெற்ற ஒரே கோலிவுட் சூப்பர்ஹீரோ மாதவன் தான். பல மேஜிக் வித்தைகளுடன் தந்திரமானவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். தன் நடிப்பால் மேஜிக் செய்ய கூடியவர் மேடி (மின்னலே, இறுதிசுற்று). பல டைம் லூப்களில் பயணிக்க கூடியவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். பல ஆண்டுகளாக 2000 யில் பார்த்த மாதிரியே இருக்கிறார் மேடி. உண்மையில் டைம் லூப்பை உபயோகிப்பவர் மேடி (அலைப்பாயுதே) தான் போல.

ஸ்டார் லோர்ட் (Star Lord) - கார்த்தி

n7qagnl8

பவர்ஃபுல் அதே நேரம் சிரிப்பூட்டும் சூப்பர்ஹீரோ ஸ்டார் லார்ட். சீரியஸாகவும் (தீரன் அதிகாரம் ஒன்று), கேலி கிண்டலுமாகவும் (சிறுத்தை) நடிக்க கூடியவர் கோலிவுட்டில் கார்த்தி தான். ஐம்புலங்களையும் கட்டுப்படுத்தும் திறன் பெற்றவர் ஸ்டார் லார்ட். சோழப்பரம்பரையின் தூதுவனாக (ஆயிரத்தில் ஒருவன்) நடித்து லைக்ஸ் பெற்றவர் கார்த்தி. மேலும் தன் கண்ணில் ஒரு துறுதுறு, கள்ளத்தனம் கூடிய கார்த்தி, ஸ்டார் லார்ட் செய்யும் சில மொக்கை காமெடிகளுக்கும் ஆப்டாக இருப்பார்.

கமோரா (Gamora) - தமன்னா

htfl4kkg

ஒரு மர்மத்தை தன்னுள் புதைத்து வாழும் அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோ, கமோரா. ஸ்டார் லோர்ட்டின் காதலியான கமோரா, வில்லனின் வளர்ப்பு மகளும் தான். நார்மல் கோலிவுட் படங்களின் ஃபார்மூலாவாக இருக்கும் கமோராவின் குணாதிசயங்களை தமன்னாவால் அப்படியே வெளிகாட்ட முடியும். ஸ்டார் லோர்ட் (கார்த்தி) ஜோடியாக நடிக்க தமன்னாவை விட சிறந்த ஜோடி யாரும் இருக்க முடியாது.

ராக்கெட் ரக்கூன் (Rocket Raccoon) - விஜய் சேதுபதி (வாய்ஸ்)

e9om223g

அவெஞ்சர்ஸ் உலகில் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸியில் வரும் சுட்டி சூப்பர்ஹீரோ தான் ராக்கெட். இதற்கு வின் டீசல் வாய்ஸ் கொடுத்திருப்பார். அனைத்து சூப்பர்ஹீரோக்களையும் சகட்டு மேனியாக கலாய்ப்பதையே ஃபுல் டைம் வேளையாக வைத்துள்ளது ராக்கெட். கோலிவுட்டில், தனக்குகென தனி வாய்ஸ் மாடுலேசன் கொண்டவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வாய்ஸ் மாடுலேசன் செய்தே காமெடியில் கலக்குபவர் விஜய் சேதுபதி (காதலும் கடந்து போகும், சூது கவ்வும்). ராக்கெட்டின் வாய்ஸ்க்கு விஜய் சேதுபதியை தவிர வேறு யார் வாய்ஸும் ஆப்ட்டாக இருக்காது.

கேப்டன் மார்வெல் (Captain Marvel) - நயன்தாரா

37r5apso

பெண் சூப்பர்ஹீரோகளில் முதன்மையானவர் கேப்டன் மார்வல். கோலிவுட் உலகின் பெண் சூப்பர்ஸ்டார், கேப்டன் மார்வெல் வேறுயாறு நயன்தாரா தான். ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா என அனைத்து டாப் சூப்பர்ஹீரோக்களுக்கும் ஈடுக்கொடுக்கும் திறன் படைத்தவர் கேப்டன் மார்வெல். சூப்பர்ஹீரோ ஆகும் முன்பே சூப்பர்ஹீரோக்கள் செய்யும் தொழிலான விமான படையில் பணிபுரிந்தவர் கேப்டன் மார்வெல். சந்திரமுகி முதல் தளபதி 63 வரை அனைத்து கோலிவுட் சூப்பர்ஹீரோகளுடன் நடித்து அவர்களுக்கே டஃப் கொடுத்த நயன்தாரா தான் கோலிவுட்டின் கேப்டன் மார்வெல்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்