முகப்புகோலிவுட்

KPY ராமர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்..!

  | December 05, 2019 12:45 IST
Ramar

துனுக்குகள்

 • விஜய் டிவியில் KPY நிகழ்ச்சியில் பிரபலமானவர் ராமர்.
 • இவர் தற்போது புதிய காமெடி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
 • இப்படத்தை அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்குகிறார்.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராமர், கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு' எனும் காமெடி நிகழ்ச்சியியின்மூலம் தமிழ் ரசிகர்களிடையே உலகமெங்கும் பிடபலமடைந்தவர் ராமர். இவரின் நகச்சுவையும் பாடி லாங்குவேஜும் பார்த்து ரசிக்காதவர்கள் குறைவு. ‘என்னம்மா இப்படி பன்றீங்களே மா' எனும் இவரது டயலாக் பட்டி தொட்டியெங்கும் பரவியது. அதனால் அவரை ‘என்னம்மா' ராமர் என்றும் அழைக்கப்பட்டார். மேலும், இவர் தனது சொந்த ராகத்தில் ஏதேனுன் சினிமா பாடலை பாடுவது பலரையும் ரசிக்கவைத்தது.

இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில், ‘ராமர் வீடு' எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை நடித்தும், தொகுத்தும் வழங்கிவந்தார். இந்நிலையில், இவருக்கு  திரைப்படத்தில் முன்னணி கதாப்பத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர் ‘போடா முண்டம்' எனும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அவதார் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை கதைகளத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகை சஞ்சனா கல்ராணி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் மணி ராம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

மேலும், இப்படத்தில் பிக் பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரேஷ்மா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com