முகப்புகோலிவுட்

கிருஷ்ணா நடித்துள்ள ‘களரி’ பட டிரெய்லர்

  | August 21, 2018 20:11 IST
Krishna

துனுக்குகள்

 • இதில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார்
 • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
 • படத்தை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘வீரா’ படத்திற்கு பிறகு நடிகர் கிருஷ்ணா கைவசம் இளனின் ‘கிரகணம்’, கிரண் சந்தின் ‘களரி’, தனுஷின் ‘மாரி 2’, சத்யசிவாவின் ‘கழுகு 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘களரி’ படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் டூயட் பாடி ஆடியுள்ளார்.

வி.வி.பிரசன்னா இசையமைத்துள்ள இதற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘நக்ஷத்ரா மூவி மேஜிக்’ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, கிருஷ்ணா தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com