முகப்புகோலிவுட்

'குட்டி சேது வந்தாச்சு' - மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி தாயனார்..!

  | August 04, 2020 07:30 IST
Sethuraman

துனுக்குகள்

  • 2013 ஆம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவைப் படமான "கண்ணா லட்டு தின்ன ஆசையா"
  • மேலும் இந்த லாக் டவுன் தொடங்கியதும் திரையுலகம் முதலில் கேட்ட ஒரு சோக
  • சேதுராமன் கடந்த 2016ம் ஆண்டு உமையாள் என்பவரை மணந்தார், அவர் கருவுற்று
2013 ஆம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவைப் படமான "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் சேதுராமன். பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவரான இவர் "கண்ண லட்டு தின்ன ஆசய்யா" படத்தின் வெற்றிக்குப் பிறகு, மேலும் மூன்று தமிழ் படங்களில் நடித்தார், "வாலிப ராஜா" (2016), "சக்கா போடு போடு ராஜா" (2017), மற்றும் "50/50" (2019). சிறந்த மருத்துவராக திகழ்ந்து வந்த இவருக்கு திரைத்துறையில் பல நண்பர்கள் உண்டு. பல சமூக பணிகளிலும் இவர் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த லாக் டவுன் தொடங்கியதும் திரையுலகம் முதலில் கேட்ட ஒரு சோகச்செய்தி இவர் மரணம் தான். மார்ச் 26ம் தேதி இவர் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். சந்தானம், சதீஷ் உள்ளிட்ட பல திரைப்பிரபலன்கள் இவருடைய மறைவிற்காக வருத்தம் தெரிவித்தனர். 35 வயதில் ஒரு நல்ல மனிதரனை இந்த திரையுலகம் இழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

சேதுராமன் கடந்த 2016ம் ஆண்டு உமையாள் என்பவரை மணந்தார், அவர் கருவுற்று இருந்த நிலையில் சேதுராமன் மரணிக்க தற்போது உமையாளுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரபல PRO அய்யா டைமோண்ட் பாபு அவர்கள் இந்த தகவலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com