முகப்புகோலிவுட்

லேடி சூப்பர் ஸ்டாருடன் இணையும் அர்ஜூன் ரெட்டி!!!

  | March 07, 2019 14:18 IST
Nayanthara

துனுக்குகள்

 • தமிழில் களமிறங்குகிறார் விஜய் தேவரகொண்டா.
 • ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
 • தற்போது ஆர்.எஸ். பிரபு தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின.
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் விஜய் தேவரகொண்டா.  தெலுங்கில் தான் நடித்த படத்தின் மூலம் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை கொண்ட இவர் தமிழில் “நோட்டா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.  தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார். 
 
மணிகண்டன் இயக்கிய “காக்கா முட்டை” படத்தில் வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  தற்போது ஆர்.எஸ். பிரபு தயாரிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிக்க போவதாக கூறப்படுகிறது.  ஆனால் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தற்போது லேடி சூப்பர் ஸ்டார் “ஐரா” படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  மேலும் “தளபதி 63” திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com