முகப்புகோலிவுட்

நயன்தாரா திருமணம் எப்போது….? முக்கிய அறிவிப்பு…!

  | February 13, 2019 12:45 IST
Nayanthara

துனுக்குகள்

  • சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார்
  • நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படத்தில் நடிக்கிறார் இவர்
  • தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார்
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவரது திருமணம் குறித்து பல்வேறு காலங்களில் பல கதைகள் சொல்லப்பட்டது.
 
ஆனால் எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் தமிழ் சினிமாவின் உட்பட்ச நட்சத்திரமாக இன்றும் இருந்து வருகிறார்.
 
தற்போது நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ‘ஐரா' உருவாகி இருக்கிறது. விஜய் - அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.  அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படங்கள் இவர் கைவசம் இருக்கின்றன.
 
அடுத்தடுத்து திரைப்படங்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கின்றனர் சிலர். நயன்தாராவுக்கு இப்போது வயது 34. நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவரும் அறிந்த செய்திதான். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள்
காத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை தொடுவதை இலக்காக வைத்துள்ளார் என்கிறார்கள் திரைத்துறை வட்டாரத்தை சேர்ந்த சிலர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்