முகப்புகோலிவுட்

தனுஷுக்கு ஜோடியான லக்ஷ்மி மேனன்

  | October 23, 2018 13:35 IST
Dhanush

துனுக்குகள்

  • ராம்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார
  • இந்த படம் ஃபேண்டசி காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறது
  • இதன் ஸ்க்ரிப்ட் வொர்க் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
தமிழில் விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்' படத்திலும் விஷ்ணுவே ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படமும் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் ஃபேண்டசி காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறது. ஸ்க்ரிப்ட் வொர்க் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர். தற்போது, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லக்ஷ்மி மேனன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்