முகப்புகோலிவுட்

“ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை” - லட்சுமி மேனன்

  | April 20, 2019 16:09 IST
Lakshmi Menon

துனுக்குகள்

 • கும்கி படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்
 • விஜய் சேதுபதி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்
 • இவர் நடிப்பில் யங் மங் சங் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது
கும்கி திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை ஒரு ரவுண்டு வந்தவர் லட்சுமி மேனன். கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் இவருக்கு  பெரும் ஆதரவையும், வரவேற்பைபும் தமிழ் ரசிகர் கொடுத்திருந்தார்கள்.
 
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த இடைவெளி குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் இவர்,
 
 `யங் மங் சங்'படத்தில் நடித்திருக்கிறேன்.  விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து, 2 தமிழ்ப் படங்களில்  நடிக்க கதை கேட்டு வைத்துள்ளேன். முடிவானதும் சொல்கிறேன்.
 
நான் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த இடைவெளியை சந்தோ‌ஷமாக கழிக்கிறேன். வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை... அது எனக்குப் புரியும்” என்று கூறியிருக்கிறார்
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com