முகப்புகோலிவுட்

சூர்யா-ஜோதிகாவுக்கு ஆதரவு அளிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.!

  | April 27, 2020 15:48 IST
Lakshmy Ramakrishnan

அவர் நிச்சயமாக எல்லா மத இடங்களையும் தான் குறிக்கிறார். நான் வீடியோவைப் பார்த்தபோது, எனக்கு புண்படுத்தவில்லை.

தற்போது ஜோதிகாவுக்கு எதிராக வெடித்துள்ள சர்ச்சையில், சூர்யா ஜோதிகாவிக்கு ஆதரவாக இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசிவருகிறார். ஜோதிகாவின் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளிவந்தது. ‘ராட்சசி' படத்துக்காக ஒரு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்தியபோது, மருத்துவமனை எவ்வளவு மோசமாக பராமரிக்கப்படுகிறது என்பதை ஜோதிகா கவனித்துள்ளார். மக்கள் உயிர்வாழ்வதற்கு மருத்துவமனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் கோயில்களுக்கு அவர்கள் செய்யும் அதே வழியில் மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த அறிக்கை சிலருக்கு தவரான கருத்தாக உள்வாங்கப்பட்டது. மேலும், அவர்கள் அந்த அறிக்கையை கண்டனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் ஜோதிகாவின் அறிக்கையை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் ஏன் ஜோதிகா & சூர்யாவைத் தாக்குகிறார்கள்?! அவரது பேச்சை fjfwmagofficialawards-இல் கேட்டேன். அவர் புண்படுத்தும் விதமாக எதையும் சொல்லவில்லை! அவர் சொன்னது முற்றிலும் நியாயமானது. கோரோனாவால் ஏற்பட்ட எல்லா துன்பங்களுக்கும் பிறகும், நாம் கற்றுக்கொள்ளவில்லை, அது ஏன்? அழுக்கு சாதி அரசியலை ஏன் கையாள வேண்டும்?!! ஒருவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க முடியாது மற்றும் வாக்கியங்களை எச்சரிக்கையுடன் வடிவமைக்கவும் முடியாது.!! அவர் நிச்சயமாக எல்லா மத இடங்களையும் தான் குறிக்கிறார். நான் வீடியோவைப் பார்த்தபோது, எனக்கு புண்படுத்தவில்லை. எல்லாவற்றிலும் தவறுகளையும் குத்தங்களையும் நாம் தேட முடியாது!! யாராவது காயமடைந்தால், அவர்கள் கண்ணியமாக வெளிப்படுத்தட்டும், நானும் ஜோதிகாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வேன்” என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் சூர்யா ஜோதிகாவுக்கு எதிராக பேசிவருபவர்களுக்கு தொடர்ந்து பதிலளித்துவருகிறார். அதே சமயம், சமீபத்தில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படம் OTT தளத்தில் விற்கப்பட்டுள்ள விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக திரையரங்க உரிமையாளர்கள் இனி சூர்யா மற்றும் அவர் சம்மந்தப்பட்டவர்களின் படங்களை திரையிடப் போவதில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com